பண்ருட்டி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

32

வருகின்ற ஆகஸ்ட்-13 அன்று நமது மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நெய்வேலி பொது கூட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். அவரது பயணம் பண்ருட்டி வழியே அமைவதால், அதை பயன்படுத்தி கட்சியை எப்படி பலபடுத்துவது என திட்டமிட கலந்தாய்வு கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. தீபன், அவர்கள் சிறப்புரையாற்றினார். கடலூர் திரு. குப்புசாமி, திரு.ரவி ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். பண்ருட்டி நகர ஒருங்கிணைப்பாளர் திரு.கண்ணன், சிவசங்கரன், பாட்ஷா, வெற்றிவேலன், அருள், சுரேஷ், அருள்தங்கையன், மேல்கவரபட்டு பகுதியில் இருந்து வீரகன்டமணி, கண்டரகோட்டை ராமதாஸ்,  ஆகியோர் தங்களுது பகுதியை சேர்ந்தவர்களுடன் கலந்து கொண்டார்கள். மேலும், கீழ்கவரபட்டு, கண்டரகோட்டை, முத்துகிருட்டினபுரம், சின்னப்பேட்டை, பண்டரகோட்டை, கணிசபாக்கம், அங்குசெட்டிபாளையம்  மற்றும் பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 50  உணர்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. வருகின்ற அன்று நெய்வேலி பொதுகூட்டதுக்கு வருகை தரும் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு கண்டரகோட்டை, பண்ருட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு  அளிப்பது.

2. கண்டரகோட்டை, பண்ருட்டி மற்றும் மேல்கவரபட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்ற  நிகழ்ச்சி நடத்துவது எனவும்.

3.  செந்தமிழன் சீமான் அவர்கள் வருகையின் போது பெரும் கூட்டத்தை கூட்டுவது எனவும். ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

கூட்டம் சிறக்க உழைத்த அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் நாம் தமிழரின் நன்றிகளும் பாராட்டுக்களும்..

முந்தைய செய்திNaam Tamilar Party coordinator Seeman’s Headlines Today Interview on reaction to Gotabaya Interview
அடுத்த செய்திமதுரை மாவட்டம் சின்னகட்டளையில் நடைபெற்ற நாம் தமிழர் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்