2026 - படைப்போம் புதிய அரசியல் வரலாறு!
அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்தை முன்னிறுத்தி, ஆணுக்கு பெண் சமம் அல்ல; ஆணும் பெண்ணும் சமம் என்ற புரட்சிகர சிந்தனையுடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சரி சமமாக ஆண்-பெண் வேட்பாளர்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி வெல்லட்டும்!
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்!
ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! ஒரே மொழி! ஒரே மதம்! ஒரே தேர்தல்! ஒரே கல்வித்திட்டம்! ஒரே தேர்வு! என அனைத்திலும் ஒற்றைமயத்தை உட்புகுத்தி, மாநிலங்களின் தன்னுரிமையையும், தேசிய இனங்களின் தனித்துவத்தையும் குலைக்க முனையும் இக்காலக்கட்டத்தில், அவற்றை மீட்டுக் காக்க தேசிய இனங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியது தலையாயக்கடமையாகும். மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்! என்ற தத்துவ முழக்கத்திற்கு ஏற்ப அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கான புதிய கொள்கைகள், திட்டங்கள், நிலைப்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வரைவு 2024 முன்வைக்கிறது.
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு! என்ற நமது தேசியத் தலைவரின் புனிதக்கூற்றுக்கிணங்க, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத் தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் இத்தேசியக் கடமையைப் பகிர்ந்து கொண்டு நம்மால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு துணைநிற்போம்!
புதியதொரு தேசம் செய்வோம்! ஓர் இனத்தின் பெருங்கனவு | மாத இதழ்
நமது கட்சியின் செய்திகளை முழுமையாகத் தாங்கிவரும் அதிகாரப்பூர்வ இதழான “புதியதொரு தேசம் செய்வோம்” ஆண்டுக் கட்டணம் ரூ.350 (அஞ்சல் செலவு உட்பட) செலுத்தி மாத இதழைத் தடங்கலின்றி அச்சிட்டு வெளியிடத் துணை நிற்போம்!