முதன்மைக் கொள்கைகள்

1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்!

2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ! தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்!

3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்!
அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட
போராடுவதே நமது இலட்சியம்!

4)தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!

5)சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வோம்.

6)நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவோம்!

7)இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்போம்! தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்போம்!

8)உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்!

9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம் பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம்!

10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம்!

11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம்! சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம்! சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்! தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம்!

12)மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல! – அதை அடைவது பிறப்புரிமை! – அதற்காகப் பாடுபடுவோம்!

13)எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! தமிழைக் கற்போம்! தமிழில் கற்போம்!

14)அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி! வழக்காடு மொழி!
தமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு!

15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம்!

16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது! ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது!

17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம்! கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்

18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம்!

19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம் அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம்!

20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம்! கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம்!

21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்!

22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம்! அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம்!

23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம்!
(எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.

24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம்!

25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம்! நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம்!

26)சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்!