நாள்: 01.06.2020
என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும்,
அன்பு வணக்கம்!
தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமாக தன்னலமற்று ஒரு தூய அரசியலை முன்னெடுப்பதற்காக நாம் தமிழர் கட்சி எனும் ஒரு மாபெரும் அரசியல் படையைக் கட்டி எழுப்பி வருகிறோம். இப்பெரும்போரில் அறப்போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சியை ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைக்கப் பாடுபாட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தார்மீகக்கடமையாகிறது. அதனை நிறைவேற்றும் பொருட்டு, கருத்தியல் பரப்புரையும், களப்பணியும் செய்து ஈடேற்றப் பொருளாதாரத் தன்னிறைவு மிக அத்தியாவசியக் காரணியாகிறது. ‘சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம், பொருளாதார வாழ்வில் தன் சொந்தக்கால்களில் நிற்க வேண்டும்’ எனும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது கூற்றுக்கிணங்க, பொருளாதாரத்தில் வலிமையடைய வேண்டியது பேரவசியமாகிறது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்குக் குறைவான காலங்களே இருப்பதால் அதற்கான முன்நகர்வுகளையும், முன்னேற்பாடுகளையும் செய்யவும், உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குக் காலத்தில் துயர்துடைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மிகுதியானப் பொருளாதாரம் தேவையாக இருக்கிறது. அத்தகையப் பொருளாதார வலிமையை அடைய அதற்கானக் கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு, ‘துளி’ எனும் மாபெரும் திட்டத்தை ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே!
ஆகவே, பொருளாதாரப் பலம் கொண்ட இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பும் சனநாயகவாதிகளும் ‘துளி’ திட்டத்திற்குப் பக்கத்துணையாக நின்று, நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய தங்களால் இயன்ற ஒரு சிறுதொகையை மாதந்தோரும் துளி திட்ட நிதியாக வழங்கவும், தங்களைப் போலப் பொருளாதார வலிமை கொண்டவர்களை இத்திட்டத்தில் இணைத்து கட்சியின் வளர்ச்சிக்குத் துணைநிற்கவும் வேண்டுமென உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துளி திட்டச் செயலியில் தங்களது வங்கிக் கணக்கை இணைத்து தங்களால் இயன்ற சிறு தொகையை தானியங்கு முறையில் மாதந்தோறும் வழங்கி கட்சியின் வளர்ச்சிக்குத் துணைநில்லுங்கள்!
துளி செயலியை தரவிறக்கம் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=org.naamtamilar.thuli&pcampaignid=web_share
துளித்துளியாய் இணைவோம்; பெருங்கடலாகும் கனவோடு!
‘துளி’ திட்டம்:
கட்சியின் வளர்ச்சிப்பணிகளுக்காக மாதந்தோறும் குறைந்தபட்சம் 1,000 நபர்களிடமிருந்து 100 முதல் 1,000 ரூபாயை திரட்டுவதுதான் இதன் வேலைத்திட்டம். நாம் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை வளர்ச்சி நிதியாக அளித்து இத்திட்டத்தினைச் செயலாக்கம் செய்வதன் மூலம் நம் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொருளாதார நெருக்கடியினை நம்மால் முழுமையாக அகற்றிவிட முடியும்.
வங்கி கணக்கு விவரம் :
கணக்கின் பெயர்: நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi)
வங்கியின் பெயர்: ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
நடப்பு கணக்கு எண்: 916020049623804
IFSC Code: UTIB0002909 MICR Code: 600211076 SWIFT Code: CHASUS33
கிளை: மதுரவாயல், சென்னை (Maduravoyal, Chennai-600095)
UPI / Google Pay / PhonePe / AmazonPay: 9092529250@ybl
துளி – திட்டச்செயலி மூலம் கட்சி வளர்ச்சி நிதி வழங்குவது எப்படி..?
துளி திட்டத்தின் மூலமாக கட்சி வளர்ச்சி நிதி வழங்க விரும்பும் உறவுகள் அனைவரும் துளி திட்டச்செயலிக்கான வலைதளத்தில் (https://thuli.naamtamilar.org) தங்களது உறுப்பினர் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாக பதிவுசெய்துகொண்டு (One Time Registration) தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை இணையவழி பணப்பரிமாற்றத்தின் வாயிலாக கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கியதும் பணம் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் பொருட்டு பணப் பரிமாற்ற விவரங்களுடன் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் நீங்கள் ஒவ்வொரு முறை செலுத்தும் சிறு தொகையும் உங்கள் உறுப்பினர் கணக்குப் பக்கத்தில் சேமித்துவைக்கப்டும்.
கட்சி வங்கி கணக்கிற்கு நேரிடையாக பணம் செலுத்தியவர்கள் அதற்கான பணப்பரிமாற்ற எண் / பற்றுச்சீட்டு நகலை thuli@naamtamilar.org / ntkthuli@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உறுதிபடுத்திக்கொள்ளவும்.
தொடர்புக்கு:
கு.செந்தில்குமார் +91-9600709263 (தலைமை நிலையச் செயலாளர்)
கா.சாரதிராஜா +91-9500767589 (தலைமை அலுவலக நிர்வாகி)