முகப்பு அறிக்கைகள் வாழ்த்துச் செய்திகள்

வாழ்த்துச் செய்திகள்

புனித ரமலான் பெருநாள் வாழ்த்துகள் – 2025!

இறைவனை எண்ணி நோன்பு நோற்கும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு, உடல் வருத்தத்தையும் பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி, நபிகள் பெருமானார் காட்டிய நெறிவழி...

பொதுத்தேர்வெழுதும் மானவர்களுக்கு சீமான் வாழ்த்து!

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கின்ற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி-தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்! தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்..! வென்று மென்மேலும் உயருங்கள்..! -...

உலகத் தாய்மொழி நாள், 2025! – சீமான் வாழ்த்து!

தாயே! தமிழே!! வணக்கம்!!! தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்..! இந்த நாள் மட்டுமல்ல., எங்களுக்கு எல்லா நாளும் தாய்மொழி நாள்தான்! தமிழால் ஒன்றிணைந்து, நாம் தமிழராய் வென்றெடுப்போம்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இனம்...

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்பட்டது: தானேழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து!

மதுரை அரிட்டாப்பட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவது, முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை. மண்ணைக் காக்க தீரத்துடன் ஓரணியில் திரண்டு பேரெழுச்சியாக அறப்போர் புரிந்த...

தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் தமிழர் திருநாள் – 2025! – சீமான் வாழ்த்து

முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்! மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்! தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்: திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்! இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்: இந்திய - நாவலந்தேயத்து இறைமையர்! வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியர்! வளந்தரு குறிஞ்சியில் காதலை...

தமிழர் எழுச்சி நாள் விழா – 2024: தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள்!

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, கார்த்திகை 11 (26-11-2024) அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால்...

அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல்...

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

அறிக்கை: தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! - செந்தமிழன் சீமான் | நாம் தமிழர் கட்சி "உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம்...

காவலர் நாளையொட்டி சீமான் வாழ்த்து!

கொட்டும் மழை, கடும் வெயில், குளிர் என எல்லாக் காலங்களிலும் இரவு-பகல் பாராது, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் என்றாலும், திருவிழாக்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், ஆன்மீக ஒன்றுகூடல்கள், தலைவர்கள் வருகை, சாதி-மதக்கலவரங்கள்,...

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து!

தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை! தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும்...