வாழ்த்துச் செய்தி: ஊடகப்போராளி பா.ஏகலைவன் அவர்களுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

86

35 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த தமிழ் ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர், சமரசமற்று உண்மையும், நேர்மையுமாக போராடும் ஊடகப்போராளி ஐயா பா.ஏகலைவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

சமகால ஊடக ஆளுமைகள் பலருக்கும் முன்னத்தி ஏர்; ஊடகத்துறையில் இலட்சியக் கனவுகளோடு கால் பதிக்க துடிக்கும் தமிழிளம் தலைமுறைக்கு ஆகச்சிறந்த வழிகாட்டி!

பணம், பதவி, அதிகாரத்திற்கு விலைபோகும் அவலம் பெருகி, ஊடகத்துறையில் நடுவுநிலைமை என்பதே கேள்விக்குறியாகியுள்ள தற்கால கொடுஞ்சூழலில், அவற்றுக்கெல்லாம் தம்மை ஒப்புக்கொடுக்காதும், ஏற்றுக்கொண்ட கொள்கையை அணுவளவும் விட்டுக்கொடுக்காதும், உண்மையின் பக்கம் நின்று மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகத்துறையின் உன்னத அறத்தினை காத்திட போராடும் ஐயா பா.ஏகலைவன் அவர்களின் பணி மிகுந்த போற்றுதலுக்குரியது.

ஐயா பா.ஏகலைவன் அவர்கள் உடல் நலத்துடனும், உள்ள உறுதியுடனும் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்து வழிகாட்டவும், ஐயா அவர்களின் ஊடக அறப்பணி சிறக்கவும் இந்நன்னாளில் உள்ளன்போடு வாழ்த்துகிறேன்!

https://x.com/Seeman4TN/status/1751137317887123667?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் தம்பி சாந்தனை உடனடியாக விடுவித்து, அவருக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024 !