அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு சீமான் நன்றி!

232

நாடாளுமன்றத் தேர்தல்-2024இல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு நன்றி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆருயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கும்,

https://x.com/Seeman4TN/status/1799483540976837079

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களுக்கும்,

https://x.com/Seeman4TN/status/1799682614972059673

பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும்

https://x.com/Seeman4TN/status/1799712236610765218

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும்,

https://x.com/Seeman4TN/status/1800014039386616286

கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களுக்கும்
https://x.com/Seeman4TN/status/1800100199530193062

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும்,

மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கும்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு இரத்தம் தி.வேல்முருகன் அவர்களுக்கும்,

மதிமுக தலைமைக் கழகச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பி துரை வைகோ அவர்களுக்கும்,

எஸ்.டி.பி.ஐ – தமிழ்நாடு மாநிலத் தலைவர் தம்பி நெல்லை முகமது முபாரக் அவர்களுக்கும்,

அன்புத் தம்பிகள் இயக்குநர்கள் சேரன், அமீர், சுரேஷ் காமாட்சி, ஆதம் பாவா ஆகியோருக்கும்,

ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், நடிகை கஸ்தூரி அவர்களுக்கும்,

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோதரர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களுக்கும்,

அரசியல் திறனாய்வாளர் அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்,

பத்திரிகையாளர்கள் ஐயா அய்யநாதன், ஐயா பா.ஏகலைவன், சகோதரர் எஸ்.பி.லட்சுமணன், தம்பி ரங்கராஜ் பாண்டே, சகோதரர் சிவப்ரியன் ஆகியோருக்கும்,

ஊடகவியலாளர்கள் சகோதரர்கள் வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன், தம்பி கார்டூனிஸ்ட் பாலா, தம்பி பிரசாந்த் ரங்கசாமி, தம்பி அருள்மொழிவர்மன், தம்பி கேப்ரியல் தேவதாஸ் ஆகியோருக்கும்,

அம்மையார் ஜெயலலிதா அவர்களின் முன்னாள் உதவியாளர் சகோதரர் பூங்குன்றன் அவர்களுக்கும்

மற்றும் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், அரசியல் ஆளுமைகளுக்கும், திரைத்துறை உறவுகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், அச்சு, காட்சி மற்றும் வலையொளி ஊடகங்களுக்கும் எனது பேரன்பினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

https://x.com/Seeman4TN/status/1801513245003440314

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு!
அடுத்த செய்திவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்கள் விவரப் படிவம்