விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு!

102

வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுவைத் அடுக்ககக் குடியிருப்பு தீ விபத்து: உயிரிழந்த சகோதரர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!
அடுத்த செய்திஅங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு சீமான் நன்றி!