பெருந்தமிழர் கக்கன் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

57

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2017 (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. ஐயா கக்கன் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுச்சுடரேற்றி மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், https://youtu.be/czdA7f2Z4SU
[mom_video type=”youtube” id=”czdA7f2Z4SU”]

பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்து துளியும் களங்கமற்று மக்கள் சேவை செய்து, தூய்மை, நேர்மை, எளிமை போன்றவற்றின் உருவமாய் திகழ்ந்த எங்கள் ஐயா கக்கன் நினைவு நாளில் அவருக்குச் சுடர் வணக்கம் செலுத்தி அவரைப் போல அவரது பிள்ளைகள் உள்ளன்போடு மக்கள் சேவையாற்ற உறுதியேற்கிறோம்.

வாக்குக்கு அதிகப்பணம் கொடுத்தவர்கள்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் வெல்வார்கள். அவர்கள் ஒருபோதும் மக்களுக்குச் சேவையாற்ற முன்வர மாட்டார்கள். இத்தகைய நிலையில்தான் 50 ஆண்டுகாலமாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்கிற நிலையிருக்கும்வரை மக்கள் சேவையைச் சாத்தியப்படுத்த முடியாது. தன்மானத்தை இழந்து வாக்குக்குப் பணம் பெறுகிற வறுமை ஏழ்மை நிலையில்தான் இவர்கள் மக்களை வைத்திருக்கிறார்கள்.

பல வாக்குச்சாவடிகளில் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தையே ஒட்டவில்லை என்பதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் நேர்மையை தெரிந்து கொள்ளலாம். இத்தேர்தலில் இவர்கள் வென்றால் சனநாயகம் தோல்வியடைந்துவிடும். இவ்வமைப்பு முறையே மொத்தமாய் பிழையாக இருக்கிறது. நாங்கள் இவை யாவற்றிற்கும் எதிராக உண்மையும் நேர்மையுமாக மண்ணுக்கும் மக்களுக்கும் உழைக்கக்கூடிய ஒரு இளந்தலைமுறையை தூய அரசியலின் தொடக்கமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று சீமான் தெரிவித்தார்.

முந்தைய செய்திஅறிவிப்பு: பெருந்தமிழர் கக்கன் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்
அடுத்த செய்திஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை