முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்

22

க.எண்: 2026050187
நாள்: 06.05.2026

மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது.
மே 18, இனப் படுகொலை நாள்
வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா? மானத்தமிழினம் இதை மறந்து போவதா? மாபெரும்
தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 04 திங்கள்கிழமை | 18-05-2026 மாலை 04 மணிக்கு
இடம்: சென்னை
(இடம் விரைவில் அறிவிக்கப்படும்)
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மே 01,உழைப்பாளர் நாள் விழா