க.எண்: 2026080236
நாள்: 05.08.2026
அறிவிப்பு:
காவிரி ஆற்றின் குறுக்கே ‘மேகதாது’ பகுதியில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டிற்கான உரிய நீர்ப் பங்கீட்டை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டாமல் மெத்தன போக்குடன் செயல்படும் மாநில, ஒன்றிய அரசுகளைக் கண்டித்தும் புதிய தமிழகம் கட்சி சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஒருங்கிணைத்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 31 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்று ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் வருகின்ற ஆடி 22ஆம் நாள் 07-08-2026 வெள்ளிக்கிழமையன்று மாலை 02:30 மணி முதல் சென்னை இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. புதிய தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பில் காவிரி நதிநீர் உரிமை மீட்க
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: ஆடி 22 வெள்ளிக்கிழமை | 07-08-2026
மாலை 02:30 மணி முதல் மாலை 07:00 மணி வரை
–
இடம்: சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடல்
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



