அறிவிப்பு: அக். 08, காவிரி நதிநீர் உரிமையை மீட்க சென்னை எழும்பூரில் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

598

 

க.எண்: 2023100443

நாள்: 03.10.2023

அறிவிப்பு:

காவிரி நதிநீர் உரிமையை மீட்க, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
(அக். 08, சென்னை எழும்பூர்)

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம்தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப்போக்கைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டத் தவறிய தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 08-10-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் திடல் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மாநிலம் தழுவிய அளவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசமூகநீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது? – ‘திராவிட மாடல்’ திமுக அரசுக்கு சீமான் கேள்வி
அடுத்த செய்திஅறவழியில் போராடிவரும் ஆசிரியப்பெருமக்களின் மீது கொடும் அடக்குமுறைகளை ஏவுவதா? – சீமான் கடும் கண்டனம்