வடலூர் பெருவெளியில் ஆய்வு மையக் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

97

க.எண்: 2024040157

நாள்: 26.04.2024

முக்கிய அறிவிப்பு:

     சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தித் தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

வடலூர் பெருவெளியில் ஆய்வு மையக் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி
தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
04-05-2024 சனிக்கிழமை, மாலை 03 மணியளவில்

இடம்: வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்

தலைமை:
ஐயா பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
, தெய்வத்தமிழ்ப் பேரவை
திரு. கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
சித்தர் மூங்கிலடியார்
தலைவர், இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம், அரசயோகி கருவூறார் தமிழின குரு பீடம்
சிம்மம் சத்தியபாமா அம்மையார்
நிறுவனர், தமிழ்வேத ஆகமப் பாடசாலை, மேச்சேரி, சேலம் மாவட்டம்.
ஐயா குச்சனூர் கிழார்
வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்.
திரு. சிவ.வெ.மோகனசுந்தரம்
தலைவர், தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கம்.
முனைவர் ஆசீவக சுடரொளி
நிறுவனர், ஆசீவக சமய நடுவம்,
தமிழர் இறைஞான சமூகநீதிக் கழகம்.
தயவுத்திரு. க.முருகன்
கடலூர் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர், வள்ளலார் பணியகம்.
முனைவர் வே.சுப்ரமணிய சிவா
வள்ளலார் ஆய்வாளர்வள்ளலார் பணியகம்.
தயவுத்திரு. மு.சுந்தரராசன்
தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,

வள்ளலார் பணியகம்.

தயவுத்திரு க.இராசமாணிக்கம்
தஞ்சை பகுதி ஒருங்கிணைப்பாளர்,

வள்ளலார் பணியகம்.

திரு ச.கலைச்செல்வம்
அமைப்பாளர்தமிழர் தேசியக் களம்.
வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன்,
தலைவர்தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழகம்.
தயவுத்திரு. குஞ்சிதபாதம்
தலைமை ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கம்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

 

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும், அச்சு, காட்சி மற்றும் வலையொளி ஊடகத்தினர் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திகீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்