விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்கள் விவரப் படிவம்

2811

நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்களை ஆதரித்து 20-06-2024 முதல் 08-07-2024 வரை நடைபெறவிருக்கும் தொடர் பரப்புரையில் பங்கெடுக்க விருப்பம் உள்ள உறவுகள் தங்களது விவரங்களை கீழ்க்காணும் இணைப்பில் சென்று படிவத்தை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேரடி களப்பரப்புரை, நிதியுதவி, பரப்புரை வாகனங்கள், பரப்புரை வாகன ஓட்டுனர், பரப்புரை மேடை அமைத்து தருதல், பரப்புரை கருவிகள் (ஒலிப்பெருக்கி, LED திரை, LED விளம்பரப்பதாகை ), துண்டறிக்கை அச்சிட உதவி, போக்குவரத்திற்கான வாகனங்கள் (Car, Van, Omni Car, Auto, Tata Ace), காணொலி தொகுத்தல், பதாகை-துண்டறிக்கை வடிவமைத்தல், உணவு சமைத்தல், உணவு சமைத்தல் உதவி, உணவு வழங்கல், தங்கும் விடுதி மேற்பார்வையிடல் உள்ளிட்ட பணிகளைப் பகிர்ந்துகொள்ள விருப்பம் உள்ள நாம் தமிழர் உறவுகள் உடனடியாக தங்கள் விவரங்களை இப்படிவத்தில் நிரப்பவும்.

நேரடி களப்பணியாற்ற முன்பதிவு செய்யும் உறவுகளுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படவிருக்கிறது. எனவே நேரடியாக வரவிரும்பும் உறவுகள் எத்தனை நாட்கள், எந்தெந்த நாட்கள் தங்கி இருந்து களப்பணியாற்ற விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்த இப்படிவத்தை நிரப்புவது மிகவும் அவசியமாகிறது.

முந்தைய செய்திஅங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு சீமான் நன்றி!
அடுத்த செய்திகள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? – சீமான் கேள்வி