கட்சி வளர்ச்சி நிதி வழங்குவது எப்படி?

துளி திட்டம் : thuli.naamtamilar.org

திரள்நிதி திரட்டல்: donate.naamtamilar.org 

துளித்துளியாய் இணைவோம்; பெருங்கடலாகும் கனவோடு!

தமிழகத்தில் எதிர்வரவிருக்கும் 2021 – சட்டமன்றத் தேர்தலில் வழமைபோல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்துக் களமிறங்குகிறது நாம் தமிழர் கட்சி. பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு ஆண்களுக்கு நிகராகச் சரிபாதி 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப்போட காத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் வாக்குகளைப் பெற்றுச் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட, தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியற்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குத் தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விடத் துணைநிற்க வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.

எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சி எனும் பாதுகாப்புப் பெரும்படையை வளர்த்து வலிமையடையச் செய்ய ஒவ்வொருவரும் தங்களால் இயன்றப் பங்களிப்புகளைச் செய்ய முன்வர வேண்டும். எவ்விதத் தத்துவத் தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையான பாதையில் நாம் தமிழர் கட்சி பயணித்தாலும் எப்போதும் பொருளாதார நெருக்கடியே நமது செயற்பாட்டை மட்டுப்படுத்துகிறது. வளர்ச்சியில் ஒரு தேக்கநிலையை உருவாக்குகிறது. பொருளாதாரப் பலமும், ஊடக வெளிச்சமும் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நாம் அடைந்திருக்கிற வளர்ச்சியைவிடப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்போம் என்பது எவராலும் மறுக்கவியலா உண்மை.

இன்றைய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்புப் படையாக, இன மீட்சி உரிமைக் குரலாகத் திகழ்ந்து வருகிற நாம் தமிழர் கட்சி தனது இலட்சியப் பயணத்தை எவ்வித தடையும் இல்லாமல் உறுதியோடு தொடரவேண்டிய நிலையில் இருக்கிறது. “பாதையைத் தேடாதே; உருவாக்கு!” என்று சொன்ன தலைவரின் மக்கள் நாம். எனவே நமக்கென இலட்சியப் பாதையை உருவாக்கி இலக்கை வென்றெடுக்கப் பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றினை மிகச்சரியாக உருவாக்கிட ‘துளி’ என்கின்ற மாபெரும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

ஆகவே, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் துளி திட்டத்தின் வாயிலாக, கட்சி வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்யத் தங்களால் இயன்ற ஒரு சிறு துளியை மாதந்தோறும் வழங்கி கட்சியின் வளர்ச்சிக்குத் துணைநில்லுங்கள் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

‘துளி’ திட்டம் என்பது என்ன:

கட்சியின் வளர்ச்சிப்பணிகளுக்காக மாதந்தோறும் குறைந்தபட்சம் 1,000 நபர்களிடமிருந்து 100 முதல் 1,000 ரூபாயை திரட்டுவதுதான் இதன் வேலைத்திட்டம். நாம் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை வளர்ச்சி நிதியாக அளித்து இத்திட்டத்தினைச் செயலாக்கம் செய்வதன் மூலம் நம் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொருளாதார நெருக்கடியினை நம்மால் முழுமையாக அகற்றிவிட முடியும்.

‘துளி’ இணையச் செயலி மூலம் கட்சி வளர்ச்சி நிதி வழங்குவது எப்படி?

1.’துளி’ இணையச் செயலி வலைதளத்திற்குள் (thuli.naamtamilar.org) கட்சி உறுப்பினர் எனில் உறுப்பினர் எண் மூலமாகாவும் நன்கொடையாளர் எனில் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யவும்.

2. இணையவழி வங்கி பணபரிமாற்றம் (Net Banking / UPI) மூலம் குறைந்தபட்சம் 100 முதல் 1,000 ரூபாயை கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கவும்.

3. கட்சி வளர்ச்சி நிதி வழங்கியமைக்கான பணப்பரிமாற்ற தகவல்களோடு சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும்.

4. மாதந்தோறும் / ஒவ்வொரு முறை நீங்கள் செலுத்தும் சிறு தொகையும் உங்கள் உறுப்பினர்/துளி கணக்கில் சேமித்துவைக்கப்படும்.

உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் கட்சி வளர்ச்சி நிதி வழங்குவது எப்படி..?

நாம் தமிழர் உறவுகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கை செயலியில் (join.naamtamilar.org) தங்களது உறுப்பினர் எண் மற்றும் கடவுச்சொல் மூலமாக உள்நுழைந்து கட்சி வளர்ச்சி நிதி என்ற பக்கத்தில் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையைக் கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கியதும் பணப் பரிமாற்ற விவரங்களுடன் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் நீங்கள் ஒவ்வொரு முறை செலுத்தும் சிறு தொகையும் உங்கள் உறுப்பினர் பக்கத்தில் சேமித்துவைக்கப்டும்.

‘துளி’ திட்டத்தின் கீழ் கட்சி வளர்ச்சி நிதியை வங்கி கணக்கிலும் நேரிடையாகவும் வழங்கலாம்.

வங்கி கணக்கு விவரம் :
Account Name: Naam Tamilar Katchi
Bank Name: Axis Bank
Account Number: 916020049623804
IFSC code: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
Branch: No. 442, Poonamallee High Road, Maduravoyal, Chennai-600095

UPI / Google Pay / PhonePe / AmazonPay : 9092529250@ybl

PayPal: donate@naamtamilar.org

UPI: 9092529250@upi

வங்கி கணக்கிற்குப் பணம் செலுத்தியவர்கள் அதற்கான பணப்பரிமாற்ற எண் / பற்றுச்சீட்டு நகலை thuli@naamtamilar.org / ntkthuli@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

தொடர்புக்கு:
கா.சாரதிராஜா +91-9500767589 (தலைமை அலுவலக நிர்வாகி)
கு.செந்தில்குமார் +91-9600709263 (தலைமை நிலையச் செயலாளர்)

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

குறிப்பு:

  1. To Contribute, Contributor shall be an Indian citizen either living in India or abroad (NRIs with valid Indian passport). Only Indian Citizens can contribute as per Indian law. Please declare so by checking the box in the contribution form. NOTE: People, who do not hold Indian Citizenship, can still contribute by working as volunteer for the party.
  2. இந்த இணையவழி “கட்சி வளர்ச்சி நிதி” வழங்கும் முறையில் உள்நாடு வங்கிகளில் இருந்து பணம் செலுத்துவதில் ஏதேனும் குறைகள், சிக்கல்கள், சந்தேகங்கள் இருந்தால் 9600709263/9688899936 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.