மதுராந்தகம்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2024050169 நாள்: 24.05.2024 அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த கோ.வினோத்ராஜ் (01340512198) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-09-2023 அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர், ஆலந்தூர்,...

மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு

மதுராந்தகம் தொகுதி சார்பாக 27.08.2023 மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முகவர் நியமனம், கிளைக்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி - செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக இன்று 24-07-2023 மதுராந்தகம் தேரடி வீதியில் 'தேசிய இனங்களின் உரிமை!' எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் , மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  *நெல்வாய் கூட்டு சாலையில்*  தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு சிறப்பாக ந டைபெற்றது... நிகழ்வுக்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அக்கா...

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 24-07-2023 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகளுக்கான...

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

02.07.2023 அன்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை புதுச்சேரி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

04.06.2023 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா

14.04.2023 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் திரு. மு. களஞ்சியம் அவர்கள் கலந்து கொண்டார்.

மதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

05.03.2023 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.