மாதவரம் தொகுதி மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாதவரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியம் இனைந்து நடத்திய மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம். இந்நிகழ்வில் 57 உறுப்பினர்கள் புதியதாக இனைந்தனர்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்று(16/01/23) உறுப்பினர் சேர்க்கை முகாம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் புதிதாக சேர்ந்த உறவுகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் தொகுதி தொகுதி துணைச்செயலாளர் திரு.பாலாஜி அவர்களின் முன்னெடுப்பில் ஆலந்தூர் தொகுதியில் 161 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மிகவும் சிறப்பாக நடந்தது

ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை

ஆலந்தூர் தொகுதி குருதி கொடை பாச பாசறை செயலாளர் திரு.சரவணன் அவர்களின் முன்னெடுப்பில் மூவரசம் பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை மிகச் சிறப்பாக நடந்தது இதில் தொகுதி உறவுகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குன்னம் தொகுதி போதை மற்றும் புகையிலை ஒழிப்பு மினி மாரத்தான் ஓட்டம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தைச் சேர்ந்த லெப்பைக்குடிக்காடு கிளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு  மராத்தான் போட்டி 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 அளவில் நடைபெற்றது

லெப்பைக்குடிக்காடு பொங்கல் விளையாட்டு போட்டிகள்

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு லெப்பைக்குடிக்காடு நாம் தமிழர் கட்சி பேரூராட்சி கிளையின் சார்பாக 15.01.2023 மற்றும் 16.01.2023 காலை 10 மணி முதல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன

செஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

செஞ்சி தெற்கு ஒன்றியம் காமகரம் ஊராட்சியில் வெற்றிகரமாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது.! நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.!

மண்ணச்சநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் பொங்கல் நிகழ்வு

மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக 16.01.2023 (திங்கள்கிழமை) அன்று பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 10 உறவுகள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர் மற்றும் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.

வால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் நடந்தது.

வால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர் சந்திப்பு

வால்பாறை தொகுதி துணைசெயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சியில் புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.