26.06.22 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி தொகுதி அலுவலகத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது
தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர் தலைமை தாங்கினார்.
மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலே 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை முடிவு செய்யும் என்பதால் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சியை வலுப்படுத்ததும் விதமாய் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய பொறுப்பும், கடமையும், கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் களப் போராளிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இருப்பதால் பின்வரும் இலக்குகளை நிர்ணயித்து அதை அடுத்த ஆறு மாதங்களில் நிறைவேற்றி செயல்படுத்த தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1.100% கிளை கட்டமைப்பு
2. அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் அட்டை கொடுப்பது
3. இணைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு பாசறை பொறுப்பாவது கொடுத்து அவர்களை களத்தில் செயல்பட வைப்பது
4. தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மாற்று கட்சியினர் கொடி கம்பத்தின் அருகில் நமது கட்சி கொடியையும் குறைந்தபட்சம் 75% இடங்களில் கொடியை ஏற்றுவது.
5. தொகுதி பொறுப்பாளர்களால் தேர்வு செய்யபட்டு அறிவிக்கப்பட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவது.
6.கட்சியின் பொருளாதாரக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் விதமாக அனைத்து உறுப்பினர்களும் தொகுதி பொருளாதார கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களிடம் பேசி மாத சந்தா வாங்கி பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது
7. வீரத்தமிழர் முன்னணி, கையூட்டு பாசறை, குருதிக்கொடை பாசறை போன்ற மற்ற பாசறைக்கு பொறுப்பாளர்களை நியமிக்கவும் அனைத்து பாசறைகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடவும்.
மற்றும் தொகுதி வளர்ச்சி குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.
இக் கலந்தாய்வில் தென்காசி மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், மற்றும் களப்பணி உறவுகள் கலந்து கொண்டனர்.
9655595678