காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

44

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, மாவு, ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களும், துயர்துடைப்பு உதவிப்பொருட்களும் சேகரிக்கப்பட்டு இலங்கையில் உள்ள நம் ஈழச்சொந்தங்களுக்கு அனுப்பப்படவிருக்கிறது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2 1/2 (இரண்டரை) டன் அரிசி,கோதுமை, சக்கரை போன்ற துயர் துடைப்பு பொருட்களை சேகரித்து தலைமைக்கு அனுப்பபட்டது. இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி – வேட்பு மனு தாக்கல்