கும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை  ஆதரித்து செந்தமிழன்  சீமான் அவர்கள் பரப்புரை

177

2021 தேர்தல் பரப்புரைக்கூட்டம் – 09-03-2021 சித்தஞ்சேரி | கும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை  ஆதரித்து செந்தமிழன்  சீமான் அவர்கள் செய்த பரப்புரை தொகுப்பு – நாள்-2(2)

பேரன்புகொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கிற எனது அன்பு உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம். பன்னெடுங்காலமாக உணர்வை இழந்து, சாதி, மதங்களாகப் பிளந்து, பிரிந்து, தாழ்ந்து, வீழ்ந்து தாய் நிலங்களிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கிற தமிழ்ச்சமூக மக்கள் நாங்கள். சாதியும் மதமும் எமது அடையாளங்கள் இல்லை . நாங்கள் தமிழர்கள் என்ற உணர்வை பெற்று, தமிழ்த்தேசிய இனமக்களாக ஒன்று திரண்டு, நாம் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தோடு தமிழின மக்கள் நாங்கள் ஒன்றிணைந்து, தமிழ் மீட்சிக்கு, தமிழின எழுச்சிக்கு, தமிழ்த்தேசிய இன விடுதலைக்கு, தமிழ்மக்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்கு ஒரு வலிமைமிக்கப் படையைக் கட்டி வருகிறோம். இது தன்னலமற்றது. உண்மையும் நேர்மையுமானது. முழுக்க முழுக்க என் மண்ணுக்கும் மக்களுக்குமானது. உங்கள் பிள்ளைகள் நாங்கள் எடுத்து வைக்கிற அரசியலானது உலகப் பொதுமைக்கானது. எங்களின் அரசியல் கோட்பாடானது அனைத்து உயிர்களுக்குமானது. கண்முன்னே ந ம் வளங்கள் களவு போய்க்கொண்டிருக்கிறது. நம் நிலம் நஞ்சாகிவிட்டது. குடிநீரைச் சந்தைப்பொருளாக்கிவிட்டனர். நிலமெங்கும் நெகிழிக் குப்பைகளாகிவிட்டது. நம் விதைகள் அனைத்தையும் சின்சாண்டோ நிறுவனத்திடம் விற்றுவிட்டார்கள். மரபணு மாற்றப்பட்ட உணவைத் தாய் உண்டதால் தாய்ப்பால்கூட நஞ்சாகிவிட்டது. நம் நாடு ஏற்றுக்கொண்டிருக்கிற சந்தைப் பொருளாதார கொள்கையால் இங்கு வர்த்தகம் மட்டுமே நடக்கிறது. மக்களுக்கான வாழ்க்கை நடக்கவில்லை. உங்கள் மீதான அக்கறையுடன் நாங்கள் எடுத்து வைக்கும் அரசியலைப் புரிந்துகொண்டு எங்களை ஆதரிக்க வேண்டும். வாக்கு என்பது வலிமை மிக்க ஆயுதம். என் அன்பிற்கினிய மக்கள், அருமை சொந்தங்கள் உங்கள் வாக்குகளை ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் விற்றுவிடாதீர்கள். விற்றால் ஒருபோதும் நல்ல அரசியல் மலராது. தரமானக்கல்வி, சிறந்த மருத்துவம், தூய குடிநீர், பாதுகாப்பான சுற்றுச்சூழல், தடையற்ற மின்சாரம் , சிறந்த சாலை ஆகியவற்றைத் தருவோம். ஊழல் லஞ்சமற்ற ஆட்சியை, ஆகச் சிறந்த நிருவாகத்தைத் தருவோம். அதைப்புரிந்து கொண்டு உங்கள் பிள்ளை எங்களை வெல்ல வையுங்கள். கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் தங்கை உஷா அவர்களை விவசாயி சின்னத்தில் வாக்குச் செலுத்தி வெற்றிப்பேறச் செய்யுங்கள்.

 

முந்தைய செய்திஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | இரண்டாம்நாள் பரப்புரைப் பயணத்திட்டம் (09-03-2021)
அடுத்த செய்திபொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை