க.எண்: 2021030097
நாள்: 08.03.2021
அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | இரண்டாம்நாள் பரப்புரைப் பயணத்திட்டம் (09-03-2021)
வருகின்ற ஏப்ரல் 06 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். இரண்டாம் நாள் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;
நாள் | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் |
09-03-2021
செவ்வாய்க்கிழமை |
பொன்னேரி தொகுதி
மாலை 4 மணிக்கு – மணலி நியூ டவுன் முதன்மைச்சாலை மாலை 4:30 மணிக்கு – மீஞ்சூர் கடை வீதி கும்மிடிப்பூண்டி தொகுதி மாலை 5:15 மணிக்கு – கும்மிடிப்பூண்டி கடை வீதி மாலை 6:00 மணிக்கு – பெரியபாளையம் கடை வீதி இரவு 7.00 மணிக்கு – ஊத்துக்கோட்டை கடை வீதி திருவள்ளூர் தொகுதி இரவு 8:30 மணிக்கு – திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகில் இரவு 9:00 மணிக்கு – மணவாளநகர் சந்திப்பு |
பரப்புரை நடைபெறும் பகுதிகளில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் வேட்பாளர் படம், விவசாயி சின்னம் பொறித்த உடைகள் அணிந்து கைப்பதாகைகளோடு பெருந்திரளாகப் பேரெழுச்சியோடு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி