திட்டக்குடி – குருதிக்கொடை மற்றும் உடலுறுப்பு கொடை விழிப்புணர்வு முகாம்

354

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக தமிழ்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று குருதிக்கொடை முகாம் , உடலுறுப்பு தானம் மற்றும் கண்தானம் விழிப்புணர்வு முகாம் திட்டக்குடி மருத்துவர். பிரபு மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது.45 உறவுகள் கலந்துகொண்டு குருதி வழங்கி சிறப்பித்தனர்… இம்முகாமில் கலந்துகொண்ட அனைத்து நிலை மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய, நகர , கிளை பொறுப்பாளர்களுக்கும் , கட்சி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி மற்றும் குருதிக்கொடை பாசறை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.