திருவிடைமருதூர் தொகுதி – கலந்தாய்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு

125

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (22.11.2020) எஸ் புதூர் கடைத்தெருவில் மாநில செய்தி பிரிவு செயலாளர் அண்ணன் சே.பாக்கியராசன் புலிக் கொடி ஏற்றினார். அதன்பிறகு எஸ் புதூர் காவேரி திருமண மண்டபத்தில் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது 66-வது பிறந்த நாள் விழாவும், திருவிடைமருதூர் வெற்றி வேட்பாளர் திவ்யா பிரகாஷ் அவர்களை அறிமுகப் படுத்தும் கலந்தாய்வு கூட்டமும், மாவீரர் நாள் 2020 வீரவணக்க நிகழ்வும் நடைப்பெற்றது.