09/08/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை வலுவாக சந்திக்கும் பொருட்டு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர் ஐயா கிருட்டிணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தொகுதி செயலாளர் இரா.தூயவன் தலைமையில் வாக்குச்சாவடிகளை கட்டமைக்கும் பணி கீழ்காணும் பகுதிகளில் நடைபெற்றது. பெருமாக்கநல்லூர்* பட்டீசுவரம்* இலுப்பக்கோரை* நெல்லித்தோப்பு* பண்டாரவாடை* உக்கடை
குறிப்பு1. இலுப்பகோரை ஊராட்சியில்100 நபர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது, 7 பேர் புதிதாக உறுப்பினராக இணைந்தனர், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு மரககன்றுகள் வழங்கப்பட்டது.
2. திருவலஞ்சுழி,நாகக்குடி,வலையப்பேட்டை பகுதிகளிலும் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
3. உக்கடையில் ஆக்கிரமிப்புக்குட்பட பாசன வாய்க்கால்களை மீட்ககோரி மாவட்ட ஆட்சியர் வசம் மனு கொடுக்கப்பட உள்ளது, அதற்காக பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் நிகழ்வும் நடைபெற்றது.