வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் கலந்தாய்வு

77

செய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழு கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் ஆகத்து ௦5ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி அவர்கள் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்திருந்தநிலையில்  இன்று சூலை 12,  பிற்பகல் 02 மணியளவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்மாவதி சீனிவாசலு திருமண மண்டபத்தில் (பொய்கை), மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் தலைமையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரப்புரைத் திட்டம், களப்பணிகள் பகிர்வு குறித்து கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் ஆறு தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் ஒப்புதல் பெற்று விரைவில் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்  வழக்கறிஞர் இராவணன், அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன்,  ஹுமாயுன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப் பாண்டியன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். வேலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் கருணாநிதி மற்றும் தமிழொளி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச்  செய்திருந்தனர்.

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”


முந்தைய செய்திசுற்றறிக்கை: பனை திருவிழா – 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு  
அடுத்த செய்திஅஞ்சல்துறை தேர்வுகளைத் தமிழில் எழுதிட வழிவகை செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்