சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)

248

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி

கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

நாள் – நேரம் பங்கேற்கும் தொகுதிகள் இடம்:
30-06-2019 ஞாயிறு

காலை 10 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை
1.   பவானி சாகர்

2.   கோபிச்செட்டிபாளையம்

3.   அந்தியூர்

4.   பவானி

ரத்னம் டவர் A/C ஹால்,

15, ஈரோடு முதன்மை சாலை,

(ஜீவா செட் எதிர்புறம்),

சீதா கல்யாண மண்டபம் அருகில்,

கோபிசெட்டிபாளையம் – 638476.

30-06-2019 ஞாயிறு

பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணி வரை

1.   ஈரோடு கிழக்கு

2.   ஈரோடு மேற்கு

3.   மொடக்குறிச்சி

4.   பெருந்துறை

இதில் உட்கட்சிக் கட்டமைப்பை மறுசீராய்வு செய்வது குறித்தும், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

எனவே மேலே உள்ள அட்டவணைப்படி குறிப்பிட்ட கலந்தாய்வு நாளில் பங்கேற்க வேண்டிய தொகுதிகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி