கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு

45

செய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம் | கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்தார் சீமான் | நாம் தமிழர் கட்சி

கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகின்றன.

இன்று 25-06-2019 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக் கட்டமைப்புக் குழுவைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப் பாண்டியன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கலந்தாய்வின் அடிப்படையில் கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்களில் சிலர் மாற்றம் செய்யப்பட்டனர். புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்தார்.

கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் விவரம்:
தலைவர்               –      பூ.விஜய்ஆனந்த்
துணைத் தலைவர்      –      அ.புனிதராசு
துணைத் தலைவர்      –      ஜெ.மைக்கேல் பிரான்சிஸ்
செயலாளர்             –      ப.ஆனந்த்
இணைச் செயலாளர்    –      கோ.கார்த்திக்
துணைச் செயலாளர்    –      ஏ.பெருமாள்
பொருளாளர்            –      மா.பூமிநாதன்
செய்திதொடர்பாளர்     –      நெ.பார்த்திபன்

திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் விவரம்:
தலைவர்               –      ஆ.கணேசன்
துணைத் தலைவர்      –      ஏ.பாலமுருகன்
துணைத் தலைவர்      –      ப.செந்தில்குமார்
செயலாளர்             –      இமானுவேல்
இணைச் செயலாளர்    –      சீமான் சுரேஷ்
துணைச் செயலாளர்    –      வே.சரவணன்
பொருளாளர்            –      வெ.சரவணன்
செய்திதொடர்பாளர்     –      இராஜ்குமார்


இந்த கலந்தாய்வில் உட்கட்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாளை 26-06-2019 காலை 11 மணியளவில் இராயபுரம் மற்றும் சேப்பாக்கம்தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084