முதுபெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

20

இந்தியாவின் முதுபெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஐயா ரத்தன் டாடா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயருற்றேன்.

எளிய பின்னணியில் தொடங்கி, தனது கடின உழைப்பாலும், திறமையாலும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்த உழைப்பாளர்!

எளிய மக்களுக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்ற புரட்சிகர சிந்தனையை வணிகத்தில் வென்றெடுத்த பெருந்தகை!

புதிய புதிய சிந்தனைகளைத் தொழில்துறையில் புகுத்தி, சாதித்துக் காட்டிய சாதனையாளர்!

கோடிகோடியாக ஈட்டிய வருமானத்தின் பெரும்பங்கை நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவும், கல்வி, மருத்துவப் பயன்பாடுகளுக்காகவும் வழங்கிய கொடையாளர்!

இயற்கைப் பேரிடர் காலங்களிலும், பெருந்தொற்று காலங்களிலும் மனிதநேயமிக்க உதவிகள் பல செய்த மாண்பாளர்!

பெருமதிப்பிற்குரிய ஐயா ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்தியத் தொழில்துறைக்கு மட்டுமின்றி இந்தியப் பெருநாட்டிற்கே பேரிழப்பாகும்!

ஐயாவின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தொழில்துறை நண்பர்களுக்கும், டாடா குழுமத் தொழிலாளர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா ரத்தன் டாடா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1844266730517840377

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Ratan Tata will Continue to Inspire!

I am deeply saddened by the passing away of veteran Indian industrialist and former Tata Group Chairman Ratan Tata.

A visionary leader whose revolutionary idea in business has transformed the lives of the common people!

A man who has introduced new ideas to the industry and will continue to inspire generations to come through his accomplishments!

A philanthropist who donated a large part of his earnings for the people’s welfare in the education and medical sectors!

He has rendered much humanitarian assistance during natural disasters, and when the country needs a helping hand!

The demise of Ratan Tata is a huge loss not only to the Indian industry but also to the whole country.

I convey my condolences to his family, relatives, friends in the industry, and the employees of the Tata Group who are saddened by his demise.

My tearful salutations to iconic legend Ratan Tata.

https://x.com/Seeman4TN/status/1844425086285262901

– Seeman | Chief Coordinator | NTK

முந்தைய செய்திசாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: சீமான் நேரில் ஆதரவு!
அடுத்த செய்திஆயுத வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்