கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மணலி பகுதியில் அண்ணன் சீமான் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் 9.12.2015.
அப்போது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் சாலைகள் மழைவெள்ளத்திற்கு முன்பும் இப்படிதான் சீரழிந்து இருந்தது… நகராட்சி , சட்டமன்றத் மற்றும் மாமன்ற நிர்வாகிகள் யாரும் எந்த நலத் திட்டங்களையும் முறையாகச் செய்வதில்லை என தங்கள் உள்ளக் குமுறலை அண்ணனிடம் கொட்டி தீர்த்தனர்.
தலைமுறை தலைமுறைகளாய் அவதிப்பட்டு வருகிறோம் எங்கள் வாழ்வில் எப்போது மாற்றம் வரும் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் அவர்களுக்கு ஆறுதல் கூற முடியாமல் அண்ணன் கண்கள் கலங்கியதை காணமுடிந்தது.