விதைத்த இடத்தில் மலர்தூவுவோம்!

54

12.02.2009 முருகதாசன் என்ற ஈழத்தமிழ்இளைஞன் உலகத்தின் மனச்சாட்சியை ஓங்கிதட்டியபடிக்கு
ஐக்கியநாடுகள்சபையின் அலுவலகம் முன்னால் ஜெனீவாவில் தீயில் தன்னை உருக்கிய நாள்.
ஒரு சிறு நெருப்பு விரலில் பட்டாலேயே அலறித்துடிக்கும் மனிதர்களுக்குள் உடம்புமுழுதும் நெருப்பில்
குளிக்க எப்படி முடிந்தது அவனால்.எங்களுக்காக,எமது எதிர்கால சந்ததிக்காக,எமது விடுதலைக்காகவே அவன் எரியுண்டுபோனான்.

அழிக்கப்படும் தனது இனத்தினது விடுதலையை தடுத்துநிறுத்துமாறு,இனப்படுகொலைக்குள் அழிக்கப்படும் தனது இனமக்களை காப்பாற்றுமாறு அவன் வேண்டுகோள்விடுத்த கடிதம் அவனது மரணவாக்குமூலமாக என்றென்றும் உலகின் மனசாட்சியை ஓங்கி அதிரவைக்கும்.இன்றில்லாவிடினும்-என்றாவது ஒருநாள்.
அதுவரைக்கும் அவனது நினைவை நன்றியுடன் சுமப்போம்.
அவனின் நினைவிடம் சென்று மலர்தூவி அஞ்சலிப்போம்.வாருங்கள்.
ஈகைப்பேரொளி முருசதாசனின் துயிலகம் இருக்கும் இடம்:
Hendon Cemetery Crematorium, London, NW7 1NB

முந்தைய செய்திராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் ……..ச.ச.முத்து
அடுத்த செய்திபுதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் முதலாண்டுநினைவேந்தல் நிகழ்ச்சி – அழைப்பிதழ் மற்றும் அண்ணாரின் வாழ்க்கைக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது!!