அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் சிறீலங்காவில் தயாரான ஆடைகளை புறக்கணிக்க கோரி தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.

110

கடும் குளிர் மத்தியிலும் நேற்று(19) அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை எல்லின் சந்தர் தலைமையில் சிறீலங்கா வில் தயாரான ஆயத்த ஆடைகளைப் (Ready-made Garments) புறக்கணிக்கச் சொல்லி நடைபெற்ற போராட்டதில் ஏராளமானோர் கலந்து கொண்டு “இரத்தக்கறைப் படிந்த ஆடைகளை வாங்காதீர்” , “சிறீலங்கா ஆடைகளை வாங்குதல் கொலைகளுக்கு நிகர்”, “இனப்படுகொலையை தடுப்பீர் “, “மௌனம் கலைப்பீர் ” என்று கூக்குரலிட்டு பரப்புரை செய்யப்பட்டது. ஏராளமான மக்கள் சிறீ லங்காவில் நடைபெற்ற இனப் படுகொலைகள் தங்களுக்கு தெரியாததை நினைத்து வருத்தம் தெரிவித்தனர். சிறீலங்கா ஆடைகளை புறக்கணிக்கவும் உறுதியளித்தனர். இதில் அமெரிக்கா நாம் தமிழர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திசீமான் விடுதலை – பெரியார் திராவிடர் கழகம் வாழ்த்து
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] சிகாகோவில் நடைபெற்ற மாவீரர்நாள் மற்றும் அமெரிக்கா நாம் தமிழர் தொடங்குவதற்கான கலந்துரையாடல்..