[படங்கள் இணைப்பு] சிகாகோவில் நடைபெற்ற மாவீரர்நாள் மற்றும் அமெரிக்கா நாம் தமிழர் தொடங்குவதற்கான கலந்துரையாடல்..

58

சிகாகோவில் நடைபெற்ற மாவீரர்நாள் மற்றும் அமெரிக்கா நாம் தமிழர் தொடங்குவதற்கான கலந்துரையாடல்..

11 / 12 /2010 அன்று சிகாகோ மாநகரில் மாவீரர் நாள் மற்றும் அமெரிக்காவில்  நாம் தமிழர் தொடங்குவதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது.கடும் குளிர் பனியாக இருந்தபோதலும் பலர் கலந்துகொண்டு அந்த தயாகசீலர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி மலரால் அஞ்சலி  செய்து தமது வீர வணக்கத்தை  தெரிவத்துக்கொண்டார்கள்.

நாம் தமிழர் பேரியக்கத்தின் செயல்பாட்டாளர்கள் திரு காரத்திகேயன் (கணிக்டிகிட்) மற்றும் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் தியாகி முத்துக்குமார்  அவர்களின் ஆவணப்பட  தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு செல்வராஜ் மற்றும் திரு பாக்கியராசன் அவர்களும் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு  உரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் “நாம் தமிழர்- அமெரிக்கா” என்ற அமைப்பின் தேவை பற்றி வந்திருந்தவர்களுக்கு பாக்கியராசனால் விளக்கப்பட்டது. மேலும் இது கார்த்திகேயன் அவர்களால் வழிமொழியப்பட்டது. செல்வராஜ் அவர்களால் முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம் தயாரித்தவிதம், அது சென்றடைய வேண்டிய இடம் பற்றி விளக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும். கூட்டம் முடிந்தவுடன் நாம் தமிழர் பிரதிநிதிகளோடு கலந்துரையாடி இந்த அமைப்பில் சேருவதற்கான விருப்பத்தை பதிவு செய்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் “ஜனவரி-29” என்ற முத்துகுமாரின் ஆவணப்படம் அளிக்கப்பட்டது தமிழர்களிடத்தில் முத்துக்குமாரையும் அவரின் தியாகத்தையும் பரப்ப கேட்டுகொள்ளபட்டது.

“நாம் தமிழர் – அமெரிக்கா” ஒரு முன்னோட்டமாக இங்கே அறிமுகப்படுத்தப்பட்டு, உலகம் முழுக்க இந்த அமைப்பு காலூன்ற இந்தசிறப்பு வாய்ந்த கூட்டம் வழி வகுத்தது.

முந்தைய செய்திஅமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் சிறீலங்காவில் தயாரான ஆடைகளை புறக்கணிக்க கோரி தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் மக்கள் நல பணிக்குழு சார்பாக சென்னை ஆர்க்காடு சாலையில் சாலை சீர்செய்யும் பணி நடைபெற்றது