கோவையில், காமராசர் மற்றும் பெருந்தமிழர் ம.பொ.சி. நினைவேந்தல் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராசர் மற்றும் பெருந்தமிழர் ம.பொ.சி. நினைவேந்தல் பொதுக்கூட்டம் அக்டோபர் 11 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.
நாம் தமிழர் மருத்துவ பாசறையின் மக்களுக்கான மருத்துவ முகாம் கோவையில் நடந்தது.
கோவை மாவட்டம், கருப்பம்பாளையத்தில் 11-10-14 அன்று நாம் தமிழர் மருத்துவ பாசறையின் சார்பாக மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தொடங்கிவைத்தார்.
மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது
மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி மதுரை நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11-10-14 அன்று திருப்பரங்குன்றத்தில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.இதனை மதுரை மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன் துவக்கி வைத்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11-10-14 அன்று நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருண்குமார், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான...
நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர்...
நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்து கட்சி சார்பில் கொட்டும் மழையில் 17-10-14 அன்று நடந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்...
ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனு...
கனிம வளங்களை பாதுகாக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி 17-10-14 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல்துறை தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.
காஞ்சி நடுவண் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சி நடுவண் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு கலந்தாய்வு கூட்டம், 16-10-2014 அன்று மாலை நடைபெற்றது. ஊராட்சி, பேரூர், நகராட்சி மற்றும் மக்கள் நலம், இன்றியமையா தேவைகள், நாம் தமிழர் எதிர்கொள்ளவேண்டிய பணிகள், கட்டமைப்பு,...
மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக ‘எல்லைச்சாமி’ வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இன்று (18-10-14) மும்பை, மலாட் பகுதியில் மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக நம் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
‘எல்லைக்காவல் தெய்வம்’ வீரப்பனாருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
'எல்லையைக் காத்த அய்யனார்' வீரப்பனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரது நினைவிடத்திற்கு பேரணியாக சென்று, எழுச்சியோடு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் அக்டோபர் 19 அன்று நடக்கிறது.
நாம் தமிழர் மாணவர் பாசறையின் விழுப்புரம், சேலம், கடலூர்.தர்மபுரி,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கான மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம், அக்டோபர் 19, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பேருந்து...







