முசிறி தொகுதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தல்

30

மங்கலம் கிராமத்தில் நடந்து வரும் தனியார் நிறுவன மண் கொள்ளை, ஆரோக்கியமாக இருந்த புளியமரத்தை மர்ம நபர்களால் தீவைத்து எரித்தது, வேப்ப மரத்தை முறையாக அனுமதி இல்லாமல் வெட்டியது, விவசாய மின் இணைப்பை பயன்படுத்தி வணிக நோக்கில் நீரை விற்பனை செய்து வருவது சம்பந்தமாக கடந்த நான்கு மாதமாக 1. மங்கலம் கிராம நிர்வாக அலுவலர்.
2. வளையெடுப்பு வருவாய் ஆய்வாளர்.
3.முசிறி வட்டாட்சியர்.
ஆகியோரிடம் புகார் மனு, நினைவூட்டல் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் குற்றவாளிகளை காப்பாற்றியும், அவர்களுக்கு உடைந்தையாகவும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியும், தன் கடமையை செய்ய தவறியும் நடந்து கொண்டதால்….. மேற்கண்ட மூன்று அரசு அதிகாரிகள் மற்றும் மங்கலம் தலையாரி, முன்னாள் மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய ஐந்து நபர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுவரை புகார் மனு ஏற்கவில்லை. அடுத்த கட்ட சட்ட போராட்டதிற்கு தயாராகி வருகின்றோம்.

முசிறி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர்
தொடர்புக்கு 900 3322 143

 

முந்தைய செய்திசிவகங்கை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு