மணப்பாறை சட்டமன்ற தொகுதி விழிப்புணர்வு பரப்புரை

138

மணப்பாறை அருகே ஆலத்தூர் பகுதியில் இயங்கி வரும் கலர் ஜெர்சிஸ் (Colour Jerseys) என்ற தனியார் நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த 1000 மேற்பட்ட தமிழ்நாட்டு தொழிலாளர்களை விரட்டி அடித்து விட்டு வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்தியது.

இது சம்பந்தமாக மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு தகவல் வந்ததையடுத்து, நாம் தமிழர் கட்சி உறவுகள் களத்திற்கு சென்று கள ஆய்வு செய்தனர். இதன் பாதிப்புகளை மக்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் வேலை இழந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து கருத்துக்கள் சேகரிக்கப்பட்டது. விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி ஐயா கீ ஆ பெ விசுவநாதம் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதேனி மாவட்டம் கேரளா அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்