ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா

292

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா ,15/01/2023 அன்று வீரபாண்டி தொகுதி ,அடிமலைப்பட்டி கிராமம் ,கோட்டைக்காடு பகுதியில் கட்சி உறவு கந்தசாமி அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்றது.

வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜெகதீஷ் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், மகளிர் பாசறை மாநில
ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ரத்னா அவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு நடைபெற்றது.

நாட்டு மாடுகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து நிற்க பெண்கள் மூன்று பானைகளில் பொங்கலிட்டு இயற்கையை வழிபட்ட பிறகு பாரம்பரிய உணவு வகைகளை பரிமாறி பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.

முந்தைய செய்திதமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் ! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசுற்றறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு