சுற்றறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

913

க.எண்: 2023010033
நாள்: 20.01.2023

சுற்றறிக்கை:
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு,

கட்டம் நாள் – நேரம் பங்கேற்கும் மாவட்டங்கள் நடைபெறும் இடம்
01 22-01-2023 காலை
10 மணிக்கு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பாண்டிச்சேரி கட்சித் தலைமை அலுவலகம், சென்னை
02 23-01-2023 காலை
10 மணிக்கு
நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி கட்சித் தலைமை அலுவலகம், சென்னை
03 25-01-2023 அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை புதுக்கோட்டை
(நேரம் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்)
04 26-01-2023 மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி,

கன்னியாகுமரி

மதுரை
(நேரம் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்)

மாவட்டக் கலந்தாய்வின் போது, தத்தம் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளார்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநில, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா
அடுத்த செய்திஅறிவிப்பு: தமிழ் மரபுத் திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது