‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவு நாளில் அவரது இலட்சியக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

121

‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவு நாளில் அவரது இலட்சியக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

‘தமிழீழத்தில் கொடும் இனஅழிப்பு நடக்கிறபோது, தாய்த்தமிழகத்தில் நடக்கும் தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் சிங்களர்களைப் பங்கேற்க அனுமதிப்பதா?’ எனும் இனமானக்கோபத்தோடு, தனது உள்ளத்திலே எரிந்த நெருப்பை உடலிலே கொட்டி, இன்னுயிரை ஈந்த ‘ஈகைத்தமிழன்’ தம்பி அப்துல் ரவூப் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

வீரம் என்பது நூறு பேரை வெட்டிச்சாய்ப்பதல்ல; தன்னுயிரைக் கொடுத்தேனும் இன்னொரு உயிரைக் காப்பதெனும் மகத்தான மானுட மொழிகளுக்கேற்ப, தன்னினச் சாவைத் தடுத்து நிறுத்தக்கோரி உயிரீகம் செய்திட்ட தம்பி அப்துல் ரவூப் அவர்களது உயிர்க்கொடை மகோன்னதமானது. தனது தாய் நிலத்தின் விடுதலைக்காக இளம் வயதிலேயே தூக்குமேடை ஏறிய மாவீரன் பகத்சிங்கைப் போல,தனது இளம் வயதிலேயே இனத்தின் நலனுக்காக இன்னுயிரைத் துறந்திட்ட தம்பி அப்துல் ரவூப் அவர்கள் காலங்கடந்தும் வரலாற்றில் வாழ்வார்! தம்பி அப்துல் ரவூப் அவர்களது நினைவு நாளில், அவர் தூக்கிச் சுமந்த இலட்சியக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்!