படகு கவிழ்ந்து விபத்தில் பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் – சீமான்.

40

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

சுனாமி பேரழிவு நினைவு நாளான நேற்று நடந்த ஒரு விபத்து எம் நெஞ்சை இடி போல தாக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அமைந்துள்ள பெரியபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விடுமுறையைக் கொண்டாட வாழைத்தீவுக்கு படகில் சுற்றுலா சென்ற பொழுது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தினால் 11 பெண்கள் உட்பட 13 எம் சொந்தங்கள்  தங்கள் இன்னுயிரை இழந்தும் இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வரும் செய்தி எம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.உயிர் இழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் உற்றார் உறவினர்களுடன் தனது துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.இந்த நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்குமாயும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க வகை செய்ய வேண்டுமாயும் கேட்டுக் கொள்கின்றேன்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுகூட்டம்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம்.