ராதாபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறையின் கலந்தாய்வு

92

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 6.12.2022 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் நகரம் ராயல் மண்டபத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திரு.சுடர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் கலந்தாய் கூட்டம் நடைபெற்றது
கடந்த மாதம் இருபதாம் தேதி சென்னை நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அங்கு கலந்தாய்வு கூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுதி கலந்தாய்வில் அனைவருக்கும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது மற்றும் இணையதள பாசறையின் மூலமாக கட்டமைப்பு குறித்து தெளிவாக விளக்கமளிக்பட்டது இணையதள பாசறை பொறுப்பாளர்களின் பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற பொறுப்பாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தொகுதி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும்
தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு ஓமன் நாட்டில் செந்தமிழர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்ட கவிதை போட்டியில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகமாக தொகுத்துள்ளார்கள் அந்தப் புத்தகத்தில் இராதாபுரம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திரு.ஞான அந்தோணி ராஜு அவர்களின் கவிதை 76 வது பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது ஒரு புத்தகத்தின் விலை 200 ரூபாய் திரு.ஞான அந்தோணி ராஜு அண்ணன் அவர்களின் சொந்தச் செலவில் 10 புத்தகங்கள் இராதாபுரம் தொகுதிக்கு வாங்கி இலவசமாக கொடுத்துள்ளார்கள். அண்ணன் அவர்களுக்கு இராதாபுரம் தொகுதி சார்பாக நெஞ்சேந்தர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு