நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும்! – சீமான் உறுதி

153

தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழித்துக் கானல் நீராக்கும் ‘நீட் தேர்வினை’ திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று, ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மாணவச்செல்வங்களின் தொடர் தற்கொலைகளுக்குக் காரணமாகவுள்ள கொடிய ‘நீட் தேர்வினை’ நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமெனவும், அதற்காகத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான நன்முயற்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை அளித்து, உறுதியாகத் துணைநிற்குமென்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை! – முதல்வருக்கு சீமான் நன்றி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்