நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்ட மற்றும் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள், 21.12.2021, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி அளவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், வடசேரி சந்திப்பில், புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததை பா
ர்வையிட்டனர். அரசு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வந்த சாலைப் பணியில், பழைய உடைசல் சாலைகளை அகற்றாமல், புதிய சாலைகள் தரம் குறைவாக இடப்பட்டு வருவதை அறிந்து, அந்த அதிகாரியிடம் சென்று இடுகின்ற சாலையை பொறியியல் தொழில்நுட்ப வழிகாட்டுதல் படி தரமாக இடுங்கள் என்று நமது உறவுகள், பொது மக்களின் குரலாக முறையிட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் தராமல், காவல் துறையினர் மூலம் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.