விருகம்பாக்கம் தொகுதி வடபழனி மாநகரப் போக்குவரத்துக்கழகம் பணிமனை வளாகத்தினுள்ளே தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின், புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தகவல் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. தொழிலாளர் நலச்சங்க பாசறையின் மாநிலச் செயலாளர் அண்ணன் சுரேசுக்குமார் அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. த.சா.இராசேந்திரன் அவர்கள் தகவல் பலகையை திறந்து வைத்து சிறப்புச் சேர்த்தார்கள். நிகழ்வில் விருகம்பாக்கம் தொகுதி உறவுகளோடு, மாவட்டப் பொருப்பாளர்களும் கலந்து நிகழ்வு சிறப்பித்தார்கள். களப்பணி செய்த உறவுகளோடு, தொழிற்சங்கப்பாசறை செயலாளர் (மாநகர போக்குவரத்து பிரிவு) சகோதரர் குமரன், தொழிற்சங்க பாசறை மாவட்டச்செயலாளர் கோபி ஆகியோரையும் வாழ்த்தி மகிழ்கிறது.
விருகைத்தொகுதி
நாம்தமிழர்கட்சி
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.