மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வரும் சிங்கள பேரினவாத இலங்கை கடற்படையை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக புதுக்கோட்டை தொகுதி முன்னெடுப்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை ஆறு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.
கண்டன உரையாற்றியவர்கள்
புதுகை கு.வெற்றிச்சீலன் ( மாநில கொ.ப.செயலாளர் நா.த.க)
ஹூமாயூன் கபீர் கல்வியாளர் (மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.த.க )
செய்தி தொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்