நாகப்பட்டினம் மாவட்ட கலந்தாய்வு

6

24.10.2021 அன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு மேலப்படாகையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரணியம் தொகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றார்கள்.

நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பாளர்களான கட்டபுள்ளை அப்பு, ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில், மாநில இளைஞர் பாசறை செயலாளர் மருத்துவர் சர்வத் கான், மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் பிரகாசன் கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்கள்.

கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தேர்வு, உட்கட்சி அலுவல்கள் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கட்சி கட்டமைப்பு போன்றவை விவாதிக்கப்பட்டன.