விருகம்பாக்கம் தொகுதி களப்பணியை மெருகேற்றும் விதமாக, தன்னார்வம் கொண்டு நேற்றைய தினம் மதிய உணவு வழங்கிய சகோதரி *கன்னியம்மாள்* அவர்கள், *மூன்றாவது* நாளாக இன்றைய தினம் (10/06/2021) நமது தொகுதியின் ஆற்காடு சாலை, ஆவிச்சி பள்ளி அருகாமை, வடபழனி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற *125* நபர்களுக்கு மதிய உணவாக தயிர் சாதத்தை தயாரித்து வழங்கி, நமது களப்பணிக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்…
நமது அன்புச் சகோதரி *கன்னியம்மாள்,* *அண்ணன் ராமநாதன்* இணையர்களை பெருமகிழ்வு கொண்டு
தொகுதியின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம்…
உணவு வழங்களின் ஆதாரமாய் இருந்து, களப்பணியாற்றிய, எங்கள்
*கரும்புலி ராசா* அவர்களுக்கு வாழ்த்துகள்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்