திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 12-12-2020 – (சனிக்கிழமை ) அன்று நா.முத்தையாபுரம் எல்லெப்பநாயக்கர் குளத்தில் இருந்து குலசை பகுதிக்கு செல்லும் நீர்வரத்தை, அனல்மின் நிலையத்திற்க்கு மண் அள்ளும் பணிக்காக கால்வாயின் குறுக்கே மண்சாலை அமைத்து, அந்த நீர்வரத்தை குலசைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அதனை கண்டித்தும், அந்த மணல் தடுப்பை உடனடியாக அகற்ற சொல்லியும் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கையை விரைவில் சரி செய்யாவிட்டால் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டி இருக்கும் என்ற தகவலையும் தெரிவித்துவிட்டு வந்துள்ளோம்.