அண்ணன் சீமான் அவர்களின் உத்தரவிற்கிணங்க ,
தாயக விடுதலை போருக்கு தன் உடலை பெரு நெருப்பின் நாவிற்கு இரையாக்கிய தியாக தீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து சிதிலமடைந்த வீட்டை புதியதாக கட்டமைத்து சீரமைப்பு செய்து கொடுக்கவும்,பாட்டியின் வாழ்வு காலம் வரை அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கவும் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு இன்று முதல் அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.