கையூட்டு வாங்கிய பூதாம்பூர் VAO மற்றும் RI மீதான புகார் மனு- கடலூர்

1201

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்க்குட்பட்ட பூதாம்பூர் கிராமத்தின் கிராம வாசி க.மணிகண்டன் என்பவர், தனக்கு வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்ப படிவத்தை தனது பூதாம்பூர் கிராம நிர்வாக அலுவலர் யான (VAO) சுந்தரவடிவேல் அவர்களிடத்தில் வழங்கியுள்ளார்.
விண்ணப்ப படிவத்தை வாங்கிக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.5000 கையூட்டாக கேட்டு நிர்பந்திக்கவே, விண்ணப்பதாரர் வேறு வழியின்றி தன்னால் இயன்ற ரூ.3000 கையூட்டாக கொடுத்துள்ளார். VAO சுந்தரவடிவேல் அதனை வாங்கிக்கொண்டு மீதத்தொகை ரூ.2000 த்தையும் கொடுத்தால் மட்டுமே தான் சான்றிதழ் வழங்குவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பூதாம்பூர் கிராமத்திற்குரிய வருவாய்த்துறை ஆய்வாளர் RI பிரகாஷ் அவர்களிடத்தில் கூறியபோது, அவரோ பத்தாயிரம் ரூபாய் கையூட்டாக கேட்டுள்ளார். இதனால் மன வேதனைக்கு ஆளான க.மணிகண்டன், நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி செயலாளர் ஆ.வேலாயுதம் அவர்களிடத்தில் தெரிவித்தப்போது விருதாச்சலம் வட்டாட்சியர் அவர்களிடத்தில் இதுகுறித்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி 07-07-2020 அன்று புகார் கொடுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அழுத்தத்தின் காரணமாக 09-09-2020 அன்று விண்ணப்பத்தாரறுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியது மட்டுமன்றி கையூட்டு வாங்கிய அரசு அதிகாரிகள் மீது துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு மரக்கன்றுகள் வழங்குதல்- ஆலங்குடி தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா – திருப்பத்தூர் தொகுதி