புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய அறப்போராட்டம் – திருப்பூர் வடக்கு

10

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக்கொள்கை எனும் நவீனக் குலக்கல்வித் திட்டத்திற்கெதிராக திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை 16.08.2020 அன்று காலை 11 மணி முதல் இணையவழியில் பதாகை ஏந்திய அறப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.. அதுசமயம், நாம் தமிழர் உறவுகளும், மாணவர் பாசறை நிர்வாகிகள், மற்றும் அனைத்து பாசறை நிர்வாகிகளும்,  தங்களது இல்லங்களுக்கு முன்பு கைப்பதாகை ஏந்தி, இப்போராட்டத்திலும், புதிய கல்விக்கொள்கைக்கெதிரான இணையவழிக் கருத்தியல் பரப்புரையிலும் பெருவாரியாக பங்கெடுத்தனர்..